Breaking News

இடுப்பில் வைத்து மகனை தூக்கி கொண்டு வரும் சில்லுனு ஒரு காதல்,பூமிகா !

சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம், பத்ரி, களவாடிய பொழுதுகள் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கடந்த 2007ம் ஆண்டு யோகா ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்தவர், கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை படத்தில் அக்கா வேடத்தில் ரீ என்ட்ரி ஆனார். தொடர்ந்து தற்போதும் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு மற்றும் பட விழாக்களுக்கு பூமிகா செல்லும்போது மறக்காமல் தனது மகனையும் இடுப்பில் வைத்து தூக்கிக்கொண்டு செல்கிறார்.
பெரும்பாலான நடிகைகள் தங்களுக்கு திருமணம் ஆனதையே மறைக்க முயலும் நிலையில் பூமிகா தனது மகனை இடுப்பில் வைத்து தூக்கிகொண்டு வருவதை பட குழுவினர் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். சமீபத்தில் பட விழா ஒன்றுக்கு மகனுடன் வந்த பூமிகா மேக்அப் எதுவும் அணியாமல் இயற்கையான ேதாற்றத்தில் பங்கேற்றதை புகைப்படம் எடுத்தவர்கள் அதை இணைய தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருக்கின்றனர்

No comments

");